தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெரும் புனம்


பெரும் புனம்

368. குறிஞ்சி
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?
5
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய
பசலை பாய்தரு நுதலும், நோக்கி,
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி,
வெய்ய உயிர்த்தனள் யாயே-
10
ஐய!-அஞ்சினம், அளியம் யாமே!
தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.- கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:16:00(இந்திய நேரம்)