தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மடக்கண் தகரக்


மடக்கண் தகரக்

170. மருதம்
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
5
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:17:06(இந்திய நேரம்)