தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மடவது அம்ம


மடவது அம்ம

316. முல்லை
மடவது அம்ம, மணி நிற எழிலி-
'மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்' என,
5
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
10
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே.
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-இடைக்காடனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:17:25(இந்திய நேரம்)