தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்னியது முடித்தனம்


முன்னியது முடித்தனம்

169. முல்லை
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்!
வருவம்' என்னும் பருவரல் தீர,
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி-
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி
5
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ,
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
10
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே.
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:21:07(இந்திய நேரம்)