தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அத்த வாகை அமலை


அத்த வாகை அமலை

369. பாலை
அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயில் கீரத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:30:53(இந்திய நேரம்)