தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அம்ம வாழி தோழி இன்று அவர்


அம்ம வாழி தோழி இன்று அவர்

375. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே-சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்.
யாமம் காவலர் அவியாமாறே.
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:31:23(இந்திய நேரம்)