தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இவளே நின் சொற் கொண்ட


இவளே நின் சொற் கொண்ட

81. குறிஞ்சி
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி,
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்-
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:36:19(இந்திய நேரம்)