தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெண் மணல் விரிந்த


வெண் மணல் விரிந்த

386. நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்
மாலையோ அறிவேன்மன்னே; மாலை
நிலம் பரந்தன்ன புன்கணொடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:45:56(இந்திய நேரம்)