தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கழிய காவி குற்றும்


கழிய காவி குற்றும்

144. பாலை
கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ-
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே!
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:47:40(இந்திய நேரம்)