தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கறி வளர் அடுக்கத்து


கறி வளர் அடுக்கத்து

288. குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ-
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:47:53(இந்திய நேரம்)