தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குறும்படைப்பகழிக்


குறும்படைப்பகழிக்

333. குறிஞ்சி
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன்
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக் குறை வருத்தம் வீட,
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே?
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:50:39(இந்திய நேரம்)