தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திரி மருப்பு இரலை


திரி மருப்பு இரலை

338. குறிஞ்சி
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை,
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம்
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின்
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:56:30(இந்திய நேரம்)