தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கோங்கு

254. பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன; வாரா-தோழி!-
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்-
'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால்' என, வரூஉம் தூதே.
பருவங் கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:18:04(இந்திய நேரம்)