தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


வெந்நீர் சேமச் செப்பில் பாதுகாக்கப்பட்டது.

 

277. பாலை

ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,

செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது

ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்

சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே-

'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,

எக் கால் வருவது?' என்றி;

அக் கால் வருவர், எம் காதலோரே.

தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:26:47(இந்திய நேரம்)