Primary tabs
'வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்?
செவ் வேள் கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்?
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணையாக
எவ்வாறு செய்வாம்கொல், யாம்?' என, நாளும்,
வழி மயக்குற்று மருடல் நெடியான்
நெடு மாடக் கூடற்கு இயல்பு.
இப் பகுதி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11 ஆம் சூத்திர உரையில் இளம் பூரணரால் காட்டப்பெற்றுள்ளது. இது பரிபாடலைச் சார்ந்ததாகலாம் என ஆராய்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.