தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


படைத்துக்கொண்டு வழிபடுதலே அவன் திருவருட்கு ஆளாதற்குச் சிறந்த
வழியாம் எனக் கண்ட அக் காலத்துச் சான்றோர், மாந்தரைத்
திருக்கோயில் வழிபாட்டிற்கு ஊக்குதலை இப் பரிபாடலிலேயே நன்கு
காணலாம்.

பாண்டியன் பழங்குடியிற் றோன்றிய நல்லிசைப் புலவரும், ஒப்பற்ற
இறையன்புடையோருமாகிய இளம் பெருவழுதியார் திருமாலிருஞ்
சோலைமலையின்மிசை எழுந்தருளியிருக்கும் கண்ண பெருமானையும்,
நம்பிமூத்த பிரானையும், அவர்கள் எழுந்தருளியிருக்கும் திருப்பதியையும்
வணங்கும் பொருட்டுப் பரிந்து கூறும் (15 ஆம்) பாடல் இறைவன்பா
லன்புடையார் உளத்தை உருக்கும் நலம் வாய்ந்ததாக வுளது.
இப் பாடலின்கண் அவர் கூறும் உவமைகளும் பிறவும் ஒப்பற்றன.

``நாறிணர்த்துழாயோன் நல்கின் அல்லதை வீறுபெறு துறக்கம்
ஏறுதல் எளிதன்று.'' ``அவனருளாலே தான் அவன்றாள் வணங்குதல்
வேண்டும்.அவன்றாள் வணங்கி அவனருளாலே அரிதிற் பெறும்
துறக்கத்தை மாந்தீர்! எளிதிற் பெறவும் ஒருவழியுளது. அதுதான்
யாதென்பீரேல் அப் பெருமான் எழுந்தருளியிருக்கும் இத் திருமாலிருஞ்
சோலைமலையை வாய்விட்டுப்பாடி வாழ்த்துவதேயாம். மேலும் அம்
மலை, காட்சிக்கும் மிகமிக இனியதாகும். அம் மலையின்மேல் இளவெயில்
தன்னைச் சூழ்ந்து சுற்ற இருட்பிழம்பொன்று அதனிடையே உயர்ந்தோங்கி
நின்றாற் போல, நீலமேனிப் பெருமான் பொன்னாடை புனைந்து
நின்றருளுகின்றான். அக் காட்சியை ஒருமுறை கண்டு பின்னர்
இடையறாது சிந்தித்திருமின்.மாந்தீர்! அத் திருமாலிருஞ்
சோலைமலையிடத்தே சுனையெலாம் நீலோற்பலம் மலர்ந்து திகழும்;
அச் சுனையைச் சூழ்ந்து நிற்கும் அசோகும் வேங்கையும் பொன்பூத்து
மிளிரும்; ஆதலின், அம் மலைக்காட்சியே திருமாலைக் கண்ணாரக்
கண்டாங்குக் கழிபேரின்பம் நல்குங் கண்டீர்! ஆண்டுச் சென்று அம்
மலையினைக் கண்டு தொழமாட்டாதீர் தூரிய இடத்தின் நிற்பார்க்குந்
தோன்றுமதனை நும் இருக்கையிடத்திருந்தே பணியுங்கள், அதன் புகழ்
உலகெலாம் பரவியுளதுகாண்; அம்மலையே பிறவிப்பிணிய றுக்குமொரு
கட்காணும்கடவுள் கண்டீர், ஆதலால் நும்,

"தைய லவரொடும் தந்தாரவரொடும்
கைம்மக வோடும் காத லவரொடும்
தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்."

அம் மலைமேலே,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:59:47(இந்திய நேரம்)