தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உம்பற் காட்டு இளங்கண்ணனார்

உம்பற் காட்டு இளங்கண்ணனார்
264. முல்லை
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
5
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு,
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
10
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர்
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
15
வெஞ் சின வேந்தன் பாசறையோரே?
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:42:32(இந்திய நேரம்)