மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்
மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந் தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி
சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:14:55(இந்திய நேரம்)