தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அள்ளூர் நன்முல்லையார்

அள்ளூர் நன்முல்லையார்
306
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி,
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர்
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது;
5
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும்
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே.
திணை அது; துறை மூதில் முல்லை.
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 21:55:40(இந்திய நேரம்)