தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உறையூர் முது கூத்தனார்

உறையூர் முது கூத்தனார்
331
கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல்,
வில் ஏர் வாழ்க்கை, சீறூர் மதவலி
நனி நல்கூர்ந்தனன்ஆயினும், பனி மிக,
புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும்
5
கல்லா இடையன் போல, குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது
தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்,
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉப் போல, சிற் சில
10
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலி வெண் சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே.
திணையும் துறையும் அவை.
உறையூர் முது கூத்தனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:00:58(இந்திய நேரம்)