தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கயமனார்

கயமனார்
254
இளையரும் முதியரும் வேறு புலம் படர,
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல,
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த
வளை இல் வறுங் கை ஓச்சி, கிளையுள்,
5
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று,
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு' என, நாளும்
10
ஆனாது புகழும் அன்னை
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே!
திணையும் துறையும் அவை.
...................கயமனார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:09:12(இந்திய நேரம்)