தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குளம்பாதாயனார்

குளம்பாதாயனார்
253
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப,
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல்
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின்,
5
வளை இல், வறுங் கை ஓச்சி,
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே!
திணை பொதுவியல்; துறை முதுபாலை.
....................குளம்பாதாயனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:13:53(இந்திய நேரம்)