தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
245
யாங்குப் பெரிதுஆயினும், நோய் அளவு எனைத்தே,
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து,
5
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை;
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே!
திணையும் துறையும் அவை.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:18:36(இந்திய நேரம்)