தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தாயங் கண்ணனார்

தாயங் கண்ணனார்
356
களரி பரந்து, கள்ளி போகி,
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு;
5
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து
மன்பதைக்கு எல்லாம் தானாய்,
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே.
திணையும் துறையும் அவை.
தாயங் கண்ணனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:20:06(இந்திய நேரம்)