தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பக்குடுக்கை நன்கணியார்

பக்குடுக்கை நன்கணியார்
194
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
5
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.
திணை அது; துறை பெருங் காஞ்சி.
பக்குடுக்கை நன்கணியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:23:02(இந்திய நேரம்)