தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாரி மகளிர்

பாரி மகளிர்
112
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
5
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
பாரி மகளிர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:25:12(இந்திய நேரம்)