தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மார்க்கண்டேயனார்

மார்க்கண்டேயனார்
365
'மயங்கு இருங் கருவிய விசும்பு முகன் ஆக,
இயங்கிய இரு சுடர் கண் என, பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்,
வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்துப்
5
பொன்அம் திகிரி முன் சமத்து உருட்டி,
பொருநர்க் காணாச் செரு மிகு முன்பின்
முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்
விலை நலப் பெண்டிரின் பலர் மீக்கூற,
உள்ளேன் வாழியர், யான்' எனப் பல் மாண்
10
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டு என உரைப்பரால், உணர்ந்திசினோரே.
திணை காஞ்சி; துறை பெருங்காஞ்சி.
மார்க்கண்டேயனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:35:16(இந்திய நேரம்)