தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்

ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்
180
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே;
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து,
5
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி,
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து,
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? முது வாய் இரவல!
10
யாம் தன் இரக்கும்காலை, தான் எம்
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க்
கருங் கைக் கொல்லனை இரக்கும்,
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே.
திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:52:10(இந்திய நேரம்)