தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாண்டியன் கீரஞ் சாத்தன்

பாண்டியன் கீரஞ் சாத்தன்
178
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்,
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று,
5
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன்
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
10
அஞ்சி நீங்கும்காலை,
ஏமமாகத் தான் முந்துறுமே.
திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:17:25(இந்திய நேரம்)