தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
354
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்;
வயல் அமர் கழனி வாயில் பொய்கை,
5
கயல் ஆர் நாரை உகைத்த வாளை
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை,
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை
10
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே?
திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:44:12(இந்திய நேரம்)