தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்

ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்
114
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல்
5
வார் அசும்பு ஒழுகும் முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.
திணையும் துறையும் அவை.
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:53:51(இந்திய நேரம்)