தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வியன் புலம் படர்ந்த

வியன் புலம் படர்ந்த
339
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர்
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து;
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்
5
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தல் பூக்குறூஉந்து;
பைந் தழை துயல்வரும் செறு விறற..............
10
............................................................................லத்தி
வளர வேண்டும், அவளே, என்றும்
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி,
முறம் செவி யானை வேந்தர்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
திணையும் துறையும் அவை.
..............................................................

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:04:42(இந்திய நேரம்)