தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கலை உணக் கிழிந்த

கலை உணக் கிழிந்த
236
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட! மா வண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்
5
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி,
இனையைஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே; ஆயினும்,
10
இம்மை போலக் காட்டி, உம்மை
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!
திணை அது; துறை கையறுநிலை.
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:14:57(இந்திய நேரம்)