தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கால் பார் கோத்து

கால் பார் கோத்து
185
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்,
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே;
உய்த்தல் தேற்றானாயின், வைகலும்,
5
பகைக் கூழ் அள்ளற் பட்டு,
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:19:06(இந்திய நேரம்)