தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கானக் காக்கைக் கலிச் சிறகு

கானக் காக்கைக் கலிச் சிறகு
342
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள்,
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை!
5
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
10
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்,
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்,
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா,
வாள் தக வைகலும் உழக்கும்
15
மாட்சியவர், இவள் தன்னைமாரே.
திணையும் துறையும் அவை.
அரிசில் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:19:40(இந்திய நேரம்)