தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஞால மீமிசை வள்ளியோர்

ஞால மீமிசை வள்ளியோர்
179
'ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென,
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?' என வினவலின், மலைந்தோர்
விசி பிணி முரசமொடு மண் பல தந்த
5
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து,
10
தோலா நல் இசை, நாலை கிழவன்,
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த்
திருந்து வேல் நாகன் கூறினர், பலரே.
திணையும் துறையும் அவை.
நாலை கிழவன் நாகனை வடநெடுந் தத்தனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:32:37(இந்திய நேரம்)