தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படைப்புப் பல படைத்துப்

படைப்புப் பல படைத்துப்
188
படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
5
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:45:06(இந்திய நேரம்)