பல் சான்றீரே! பல் சான்றீரே! கயல் முள்
பல் சான்றீரே! பல் சான்றீரே! கயல் முள்
பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே.
திணை அது; துறை பொருண் மொழிக்
காஞ்சி.
நரிவெரூஉத்தலையார் பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:46:41(இந்திய நேரம்)