தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பல் மீன் இமைக்கும்

பல் மீன் இமைக்கும்
270
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலம் தவ உருட்டிய நேமியோரும்
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே
5
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே! பேரில் பெண்டே!
நோகோ யானே; நோக்குமதி நீயே;
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை
இன் இசை கேட்ட துன் அரு மறவர்
10
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார்,
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை,
விழு நவி பாய்ந்த மரத்தின்,
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.
திணை கரந்தை; துறை கையறு நிலை.
(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
கழாத்தலையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:47:16(இந்திய நேரம்)