தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பூவல் படுவில் கூவல்

பூவல் படுவில் கூவல்
319
பூவல் படுவில் கூவல் தோண்டிய
செங் கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று;
5
படலை முன்றில் சிறு தினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான்,
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண!
10
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை அணிய,
15
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.
திணையும் துறையும் அவை.
ஆலங்குடி வங்கனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:50:37(இந்திய நேரம்)