தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம்

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம்
75
'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென,
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக்
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
5
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே;
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவனாயின், தாழ் நீர்
அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
10
நொய்தால் அம்ம தானே மை அற்று,
விசும்புற ஓங்கிய வெண் குடை,
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.
திணை அது; துறை பொருண்மொழிக் காஞ்சி.
சோழன் நலங்கிள்ளி பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:00:09(இந்திய நேரம்)