தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

"அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துரைநா டரண்பொரு ளொவ்வொன் - றுரைசால்
படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று
குடியெழுபான் றொக்கபொருட் கூறு."

என்பது திருவள்ளுவமாலை.

12. பரிமேலழகர் நச்சுக் கருத்துக்கள்

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்.

ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய நிலைகளினின்று, அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாதொழுகுதல்.

அதுதான் (அறம்) நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறு பாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகளொழித்து ........... கூறப்பட்டது.  (உரைப்பாயிரம்)

இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை யெனவறிக; என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு, அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருளையுங் கூறலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினாரெனவுணர்க.  (கடவுள் வாழ்த்து அதிகார முகவுரை).

தமிழெழுத்திற்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி 'எழுத்தெல்லா' மென்றார். (1) தத்துவமிருபத்தைந்தினையுந் தெரிதலாவது ......... சாங்கிய நூலுளோதியவாற்றான் ஆராய்தல் (27.)

ஏனை மூவராவர், ஆசாரியனிடத்தினின்றோதுதலும் விரதங்காத்தலுமாகிய பிரமசரிய வொழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின்கட் டீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ்செய்யுமொழுக்கத்தானும், முற்றத்துறந்த யோகவொழுக்கத்தானுமென இவர். (41)

பிதிரராவார் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கிடம் தென்றிசையாதலின், 'தென்புலத்தா' ரென்றார். (43)

புதல்வரைப் பெறுதல் - அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக விறுக்கப்படூஉங் கடன் மூன்றனுள், முனிவர்கடன் கேள்வியானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன்
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:08:58(இந்திய நேரம்)