தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.

பரிமேலழகர் 'தென்புலத்தார்' என்னுஞ் சொற்குப் 'பிதிரர்' என்று பொருளுரைத்து, "பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி" என்பர்.

64. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.

அவிழ்- அவிழ்து- அமிழ்து- அமுது= சோறு மருமம்- மம்மம்- அம்மம்- அம்முது-அமுது= பால் பாலைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லும் சோற்றைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லொடு மயங்கி, அமிழ்து என்னும் வடிவங் கொள்ளும். அமுது-அமுதம்-அம்ருத(வ,). வடமொழியாளர் அம்ருத என்னும் வடசொல் வடிவை அ+ம்ருத என்று தவறாகப் புணர்த்து, தேவரும்(சுரரும்).அசுரரும் திருப்பாற் கடலைக் கடைத்தெடுத்த சுரையைத் தேவர் உண்டதனால் சுரர் எனப்பட்டாரென்றும் அச்சுரைசாவைத் தவிர்த்ததனால் அம்ருத எனப் பெயர் பெற்றதென்றும், கதை கட்டிவிட்டனர்.அதைக் குருட்டுத்தனமாய் நம்பிய தமிழர், விண்ணுலகப் பொருளெல்லாம் மண்ணுலகப் பொருளினும் மிகச் சிறந்தவை யென்னும் பொதுக் கருத்துப்பற்றி, தலைசிறந்த இன்சுவை யுண்டியை அமிழ்து என்றும் அமிழ்தினும் இனியது என்றும், சொல்லத் தலைப்பட்டனர்.அம்ருத என்னும் வடசொல் வடிவம் கிரேக்கத்தில் ambrotos என்றும், ஆங்கிலத்தில் ambrosia என்றும், திரியும்.

340. புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு.

'ஓ' இரக்கமுமாம்.

361. அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

'தவாஅ' இசைநிறை யளபெடை,

410. விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:09:32(இந்திய நேரம்)