தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

பேதை: பிது--பெது--பெதும்பை. பெது--பேது--பேதை=மடமை மிக்க வன்,மடமை மிக்க பெண் பேதை.

பொறு: பொறுத்தல்=சுமத்தல். OE, OS, OHG beran, ON bera, Goth bairan, E bera, L fer port, GK pher, Skt bhar.பொறு-ப்ரூ(வ).

மணி: மண்ணுதல்=கழுவுதல். மண்-மண்ணி--மணி=கழுவப்பெற்ற ஒளிக்கல்.

"மண்ணி யறிப மணி நலம்" (நான்மணி.5)

மணி-மணி.

மதி: முத்துதல் மெல்ல முட்டுதல். முட்டு--மட்டு=அளவு. முத்து--மத்து=அளவு. மத்து--மத்தி--மதி. மதித்தல்=அளவிடுதல். அளந்தறிதல். மதி= அளந்தறியும் அகக்கரணம், அளவிடப்படும் பொருள், பகுத்தறிவு, அறிவு. மதி-மதி, மிதி(வ.).

மங்கலம்: மங்கு-மங்கல்-மஞ்சல்= மங்கலான (மஞ்சள்) நிறம், அந்நிறக்கிழங்கு, அக்கிழங்குப்பொடி அல்லது அரையல் அல்லது குழம்பு.

ஒ.நோ: பொங்கு-பொஞ்சு,இங்கே-இஞ்சே(கொச்சை).

மங்கல்-மங்கலம்=1.மகளிர் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் அல்லது முகத்திற் பூசிக்கொள்ளும் கன்னி அல்லது கணவணோடு கூடிய நிலைமை.

2. மஞ்சளால் அல்லது மஞ்சள் நிரால் குறிக்கப் பெறும் நன்னிலைமை.

"மங்கல மகளிரொடு மாலை சூட்டி" (புறம்.332)

3. திருமணம்."மங்கல வாழ்த்துப் பாடல்"(சிலப்).

4. திருமணத் தாலி. "மற்றைநல் லணிகள் காணுன் மங்கலங் காத்த மன்னோ" (கம்பரா.உருக்காட்டு.35).

5. மங்கல நிகழ்ச்சி."சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்." (தொல்.1037)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:12:49(இந்திய நேரம்)