தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

வள்-வண்-வண்ணம்=(1) வளைத்தெழுதும் எழுத்து அல்லது ஓவியம்.எழுத்திலும் ஓவியத்திலுமுள்ள கோடுகளெல்லாம் பெரும்பாலும் வளைந்திருப்பதையும், கோடு,வரி,வரை என்னுஞ் சொற்கள் வளைதற் கருத்தையே அடிப்படையாகக் கொண்டிருப்பதையும், நோக்குக.

2. எழுதும் மை அல்லது கலவை நீர்.

3. எழுதிய கலவை நீரின் நிறம்.

4. நிறவகை,வகை.

5. ஓவிய அழகு,அழகு.

6. செய்யுள் ஓசைவகை,சிறப்போசைச்செய்யுள்,பாட்டு,மெட்டு,பண்.

வள்=(வர்)-வரி-வரணம்(வரி+ அணம்=நிறம்,நிறம் பற்றிய குலவகை. வரிதல்=எழுதுதல். வரித்தல்=எழுதுதல். வண்ணம்--வண்ணி---வண்ணணை. வரணம்---வரணி--வரணனை. ஒ.நோ; திள்=திண்--திண்ணை; திள்--(திர்)--திரள்--திரளை--திரணை. திண்ணை திரணை என்பன போன்றே, வண்ணம் வரணம் அல்லது வண்ணனை வரணனை என்பனவும், ஒரே வேரினவாயினும் வெவ்வேறடியினின்று கிளைத்திருத்தலை நோக்குக.

வரணம்--வர்ண(வ.) வரணி--வர்ண் (வ.) வண்ணம் வண்ணி என்னும் முந்திய அடிச்சொற்கட்கு நேர் சொற்கள் வடமொழியிலின்மையும் கவனிக்கத்தக்கதே.

வரன்; புரம்= உயர்ச்சி, உயரமான கட்டிடம், கோபுமுள்ள நகர்.கோபுரம்= அரசனிருக்கும் உயரமான கட்டிடம், உயரமான காவற் கூண்டு.

"புரையுயர் பாகும்." (தொல்.785).

புரம்--பரம்=மேலுலகம்; பரம்--வரம்--வரன்=மேலான வீட்டுலகம்.

வலம், வலி; வல், வலம், வலி வலம் -பல(வ)., .L.valere வகரம் பகரமாகத்(b)திரிந்துள்ளது வடசொல்லின் பின்மையைக் காட்டும்.

வாணிகம்; பண்ணுதல்= செய்தல், உண்டாகுதல்,விளைவித்தல் பண்-பண்ணியம்=பல்வேறு விற்பனைப்பண்டம்.

பண்ணியம் -- பண்ணியன் -- பண்ணிகன் -- வணிகன் - வணிகம். வணிகன் -- வாணிகன் - வாணிகம் -- வாணிபம்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:13:24(இந்திய நேரம்)