அருக்கும்
-
குறைக்கின்ற
50
அலந்தார்க்கு
-
துன்பப்பட்டவர்க்கு
4
அவாத்தேர்
-
ஆசையாகிய தேர்
22
ஆர்க்கும்
-
கட்டுகின்ற
23
ஆற்றும்பகடும்
-
செய்ய வல்ல கடாவும்
69
இயங்கல் ஆறு
-
செல்லும் வகை
88
இருதலையும்
-
இரண்டிடத்தும்
18
இருள் தீர
-
மயக்கம் நீங்க
53
இறந்துரை
-
முறைதப்பிச் சொல்லும் சொல்
92
ஈர்வளை
-
குளிர்ந்த வளைய லணிந்தவள்
63
உள்ளல்
-
உள்ளான் என்னும் சிறு பறவை
7
ஊராண்மை
-
பிறர்மேல் செல்கின்ற ஆண்மையாகிய செருக்கு
6
எண்ணின் உலவா
-
எண்ணிக்கையில் அகப்படாத
100
எற்றார்க்கு
-
இரந்தவர்க்கு
45
ஐங்குரவர்
-
ஐந்து பெரியார்
97
ஒல்வது
-
செய்யக்கூடியது
26
கணக்காயர்
-
நூலாய்ந்தவர்; ஆசிரியர்
10
கழகத்தால்
-
சூதாட்டத்தால்
42
கன்றுங்கால்
-
மெலியுங் காலத்து
91
காழ்த்த
-
வயிரம்பற்றிய
75
கிழத்தி
-
கிழமையுடையவள்
64
கைத்து
-
கையிலுள்ளது, பொருள்
25
கைப்பது
-
கைக்கின்ற பொருள்
48
கோளாளன்
-
கொள்ளுதலுடையவன்
12
சாயினும்
-
அழிவதாயிருந்தாலும்
27
சிற்றினம்
-
கீழ்க்குலம்
32
செய்மரபு
-
உயர்ந்த முறைமை
84
தருக்கல்
-
செருக்குதல்
38
திண்ணியன்
-
திட்பமுடையவன்
33
திப்பியம்
-
தெய்வப் பிறப்பு
43
திரிகடுகம்
-
சுக்கு, திப்
1
துச்சு
-
ஒதுக்குக்குடி
57
துப்பிச்சை
-
சோற்றுப் பிச்சை
57
துப்புரவு
-
அனுபவிக்கப்படும் செல்வம்
43
துவ்வான்
-
துவ்வான் - நுகராது
89
துளங்கினும்
-
தளர்ந்தாலும்
49
தூஉயம்
-
குற்றமற்றவர்களாயிருக்கின்றோம்
27
தூற்றின்கண்
-
புதரினிடத்து
80
நட்டான்
-
நிலைநிறுத்தினவன்
16
நாடுங்கால்
-
ஆராயுடத்து
19
நெறிப்பாடு
-
வழியிற்பொருந்தல்
68
நொந்தார்
-
வருந்தினார்
67
நோன்பிலியும்
-
தவமில்லாதவனும்
28
பயவா
-
பயன்படுதலில்லாத
54
பாசத்தளை
-
கயிற்று விலங்கு
22
புல்லுங்கால்
-
தழுவும்போது
74
புறஞ்செய்தல்
-
காத்தல்
64
பூப்பு
-
மகளிர் சூதகம்
17
பெட்டாங்கு
-
விரும்பினாற்போல
99
பெறுதிக்கண்
-
பெற்ற இடத்து
91
பேணுங்கால்
-
விரும்புமிடத்து
6
பைத்து
-
படத்தைப் போன்ற
25
பொதிந்த
-
மறைத்துவைக்கப்பட்ட
24
மானத்தார்
-
பழிக்கு நாணுதலுடையவர்
23
முட்டாது
-
குறைவுபடாது
31
மைந்நீர்மை
-
குற்றத்தன்மை
35
யாண்டானும்
-
எங்காயினும்
55
வள்ளன்மை
-
வரையாது கொடுத்தல்
75
வான்புகழ்
-
பெரிய புகழ்
16
வியந்து
-
நன்கு மதித்து
38
விழுநிதியம்
-
சிறப்பாகிய பொருள்
47
வெஃகும்
-
விரும்புகின்ற
38
வெண்மொழி
-
பயனிலாச்சொல்
32