தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Inna Narpathu


என்பவரைக் குறிக்கலாம். பன்னிருபாட்டியல் என்னும் இலக்கண நூலில் கபிலர் பெயரால் அமைந்த சூத்திரங்கள் உள்ளன. 'கபிலர் அகவல்' என்னும் நூலை இயற்றிய கபிலர் ஒருவரும் உள்ளனர். இவர்களுள் பன்னிருபாட்டியலில் குறிக்கப் பெறுபவரையும் இன்னா நாற்பது செய்தவரையும், மொழியின் இயல்பைக் கொண்டு, ஒருவராகத் துணியலாம் என்பர் சிலர். மேற் குறித்த ஒவ்வொருவரும் புகுந்துள்ள துறை வேறுவேறாக இருத்தலையும், அந் நூல்களின் காலம் குறித்து வெவ்வேறு கருத்துகள் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுவதையும் நோக்கின், ஐவரும் கபிலர் என்றபெயரில் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த புலவர் எனக்கொள்ளுதலே தகும்.

இன்னா நாற்பதின் ஆசிரியர் தமதுகடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால், இவர் சமயப் பொது நோக்கு உடையார் என்று எண்ண இடமுண்டு. புறநானூறு 56-ஆம் பாடலில் இந் நால்வரும் இம்முறையே கூறப்பட்டுள்ளனர். சிலப்பதிகாரத்திலும் நால்வரும் அடுத்தடுத்துக் குறிக்கப் பெற்றாலும், சிவபெருமானைத் தவிர ஏனையோரைச் சுட்டும் வரிசையில் சிறிது மாறுபாடுள்ளது (5,169-172; 14, 7-10). இவற்றால் இந்நாற் பெருந் தெய்வங்களையும் ஒரு சேரப் போற்றும் வழக்கம் அக்காலத்து இருந்தது போலும்!

இந் நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது. முன் நூல்களையும் மரபுகளையும் நன்கு துருவி உணர்ந்து யாத்த சிறந்ததோர் உரையாய் இது அமைந்துள்ளது.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:31:39(இந்திய நேரம்)