தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Inna Narpathu

மூன்று வகுப்பிலும் உள்ளன. பல நூறு புலவர்கள் பாடிய செய்யுட்களில் இவர் பாடியன ஏறக்குறைய பதினொன்றி லொருபங்காக இருத்தலும், அவை ஒவ்வொரு தொகையிலும் சேர்ந்திருத்தலும் இவரது பாட்டியற்றும் பெருமையையும் நன்மதிப்பையும் புலப்படுத்துகின்றன. இவரியற்றிய குறிஞ்சிப் பாட்டும், குறிஞ்சிக்கலியும் இயற்கை வளங்களை யெழில் பெற எடுத்துரைப்பதில் இணையற்ற பெருமை வாய்ந்தன. தமிழ்ச்சுவை யறியாதிருந்த ஆரியவரசன் பிரகத்தனுக்கு இவர் குறிஞ்சிப் பாட்டியற்றித் தமிழ் அறிவுறுத்தினார் என்பதிலிருந்து, தமிழின்பால் இவருக்கிருந்த பெரும் பற்றும், ஏனோரும் தமிழினையறிந்தின்புறவேண்டு மென்னும் இவரது பெரு விருப்பமும், தமிழின் சுவையறியாதோரும் அறிந்து புலவராகும்படி தெருட்டவல்ல இவரது பேராற்றலும் புலனாகின்றன. நச்சினார்க்கினியர் சேனாவரையர் பரிமேலழகர் முதலிய உரையாசிரியன்மாரெல்லாரும் ஆறாம் வேற்றுமைச் செய்யுட்கிழமைக்குக் ‘கபிலரது பாட்டு என்று உதாரணங் காட்டியுள்ளார்களென்றால் இங்ஙனம் சான்றோர் பலர்க்கும் எடுத்துக்காட்டாக முன்னிற்றற்குரிய இவர் பாட்டுக்களின் அருமை பெருமைகளை எங்ஙனம் அளவிட்டுரைக்கலாகும்?

இவ்வாறு புலமையிற் சிறந்துவிளங்கிய இவ்வாசிரியர் அன்பு, அருள், வாய்மை முதலிய உயர்குணனெல்லாம் ஒருங்கமையப் பெற்றவராயும் இருந்தார். இவரது பாட்டியற்றும் வன்மையையும், வாய்மையையும், மனத் தூய்மையையும், புகழ் மேம்பாட்டையும் சங்கத்துச் சான்றோர்களே ஒருங்கொப்பப் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

"உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன்"

(அகம். 78)

என நக்கீரனாரும்,

"அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன்"

(பதிற்றுப்பத்து, 85)

எனப் பெருங்குன்றூர் கிழாரும்,
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:32:16(இந்திய நேரம்)