Primary tabs
இனியவை நாற்பது
முகவுரை
மதுரைப் பாண்டியர் அமிழ்துறழுந் தமிழ்மொழியை ஆராய்ந்து வளர்ப்பான் இரீஇய சங்கங்கள் தலை, இடை, கடையென மூன்றாமென்ப. அவற்று ளொவ்வொன்றினின்றும் பற்பல அரிய பெரிய நூல்கள் வெளிப்போந்தன. அவற்றுள் தலைச்சங்க நூலொன்றேனும் இஞ்ஞான் றிலது ; இடைச்சங்க நூல்களுள் ‘தொல்காப்பியம் ' ஒன்றே யுளது ; கடைச்சங்க நூல்களுட் பலவுள. இப் பலவற்றுள், மேற்கணக்கு நூல்களும், கீழ்க்கணக்கு நூல்களும் அடங்குவ, அவற்றுள், கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டென்ப. அதனை,
"நாலடி நான்மணி நானாற்ப
தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூல
மின்னிலைசொல் காஞ்சியு டனேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு "
என்னும் பாவானறிந்து கொள்க. இவை கீழ்க்கணக்கு நூலாய தென்னை யெனின், ஐந்தடியினேறாத செய்யுட்கள் அறம் பொருளினபங்கட் கிலக்கணங் கூறும்வழிப் பிற பொருளும் இடையிடை தாவிச் செல்லச்சில வெழுத்தாற் சிலவாக வருதலின்,
"அடிநிமிர் பில்லாச்
செய்யுட் டொகுதி
யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும் "
என்னும் பன்னிருபாட்டியற் சூத்திரத்தானும்,
"வனப்பிய றானே வகுக்குங்
காலை
சின்மென் மொழியாற் றாய பனுவலோ
டம்மை தானே யடிநிமிர் பின்றே"
என்னும் தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் 236 ஆவது சூத்திரத்தானும், அதற்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் வரைந்த வுரையானுந் தெளிக வென்க.
இக் கீழ்க்கணக்கு நூல்களையே தாயபனுவல் எனவும் கூறிப. இவை பதினெட்டனுள்ளும் ‘நானாற்பது ' என்பது இனியவை