தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kaar Narpathu


சிந்தாமணியில் மேலும் ஓரிடத்து, இப் பகுதியில் குறித்தவாறே, 'குன்றத்து உச்சிச் சுடர்' (262) என்று கூறுதலால், குன்றத்தின்மேல் விளக்கு ஏற்றுதல் வழக்கமாயிருந்தது என்பதும் தெரியவருகிறது.

வளைக் கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ, பூம்பாவாய்? (2 : 47 : 3)

என வரும் தேவாரப் பாடல் இதனைச் சிவபெருமானுக்கு உரிய விழா என்று குறிக்கிறது. இவ் விளக்கீட்டுவிழா தேவார காலத்தில் திருக்கோயில் திருவிழாவாகவும் மாறிவிட்டமை போதரும்.

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது முதலிய திணை நூல்களில் வரும் செய்திகளை ஒத்தபகுதிகள் இந்நூலில் உள்ளன. இந் நூற் செய்யுட்களை மயிலைநாதர் முதலியோர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

இந் நூலில் உள்ள நாற்பது பாடல்களில் 23 முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குப் பழைய உரை கிடைக்கவில்லை. துறை பற்றிய பழங்குறிப்பு உரையுள்ள பாடல்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. 'முல்லைக் கொடி மகிழ' என்று தொடங்கும் இந் நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள்நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:42:20(இந்திய நேரம்)